அவரது தலையைப் பிடித்து நெரித்துவிடுவார்! ஸ்டோக்ஸின் செயலைக் கண்டு அஞ்சிய முன்னாள் வீரர் (வீடியோ)
ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஸ்டோக்ஸ் மற்றும் லபுஷேனின் வார்த்தை மோதல் தொடர்பிலான வீடியோ வைரலாகியுள்ளது.
ஸ்டோக்ஸ், லபுஷேன் மோதல்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.
Things got pretty heated 👀#Ashes pic.twitter.com/UHum32WUH0
— cricket.com.au (@cricketcomau) January 5, 2026
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 384 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, 2ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்த இன்னிங்ஸின் 29வது ஓவரை இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வீசினார்.
அந்த ஓவரில் மார்னஸ் லபுஷேனுக்கும் அவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரும் நிறைய சைகைகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், லபுஷேன் கூறியது ஸ்டோக்ஸிற்கு பிடிக்கவில்லை.

கழுத்தைப் பிடித்து
இறுதியில், ஸ்டோக்ஸ் அவரது தோள்களில் தன் கையைப் போட்டு பேசிவிட்டு சென்றார். முதலில் டிராவிஸ் ஹெட்டைப் பார்த்து ஸ்டோக்ஸ் ஏதோ முணுமுணுத்தபோது இந்த மோதல் ஆரம்பமானது. எனினும், வீரர்களுக்குள்ளான வாக்குவாதம் பெரிதளவில் மோசமாகாமல் முடிந்தது.
ஆனால், லபுஷேனின் கழுத்தைப் பிடித்து ஸ்டோக்ஸ் நெரித்துவிடுவார் அஞ்சியதாக வர்ணனை செய்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய முன்னாள் வீரரான மார்க் வாக் கூறினார்.

அவர், "பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்ட வீரரை நோக்கிச் சென்று, 'ஏன் நீங்கள் வெளியேற விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார். ஓ! ஒரு சிறிய வாக்குவாதம். அவர் அவரை கழுத்தைப் பிடித்து நெரித்துவிடுவார் என்று நினைத்தேன்" என்று தெரிவித்தார்.
மறுபுறம், அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, "பென் ஸ்டோக்ஸுடன் நீங்கள் வம்பு வைத்துக்கொள்ள விரும்ப மாட்டீர்கள்" என்றார்.
ஸ்டோக்ஸ் மற்றும் லபுஷேன் இடையிலான வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இதற்கிடையில், 48 ஓட்டங்களில் இருந்த லபுஷேனின் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |