போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டேன்: திடீர் ஓய்வை அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்
Mark wood announce international retirement: இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
மார்க் வுட்
2015ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர் மார்க் வுட் (Mark Wood).
கடந்த 11 ஆண்டுகளில் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து, மொத்தம் 146 போட்டிகளில் மட்டுமே மார்க் வுட் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில், 36 வயதாகும் மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பதிலடி கொடுக்கவும் முயற்சி செய்திருக்கிறேன்
இதுகுறித்து பேசிய அவர், "காயத்தில் இருந்து மீண்டு வந்து, என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவும், என்னை தவறாக நினைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சி செய்திருக்கிறேன்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இம்முறை அந்தப் போராட்டத்தில் நான் தோல்வியடைந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மார்க் வுட் 119 டெஸ்ட் விக்கெட்டுகள், 80 ஒருநாள் போட்டி விக்கெட்டுகள் மற்றும் 54 டி20 விக்கெட்டுகள் என மொத்தம் 253 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
