ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல் - ரசிகர்கள் கோபம்
ஐபிஎல் தொடரில் இருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையில் இந்தாண்டு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் புதிதாக களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த அணியில் டிகாக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோல்டர், ஆவேஷ் கான், எவின் லீவிஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளதால் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக லக்னோ திகழ்கிறது.
இந்நிலையில் லக்னோ அணியின் முன்னணி பந்துவீச்சாளரான இங்கிலாந்தை சேர்ந்த மார்க் வுட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஒரு வாரத்திற்குள் புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் லக்னோ அணி இருக்கும் நிலையில் மார்க் வுட் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.