இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார்.
3வது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் மழை காரணமாக டிராவில் முடிந்த நிலையில், லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.+
இதன் மூலம் 1-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட 25ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட், வலது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டின் நான்காவது நாளில் வுட் காயமடைந்தார், புதன்கிழமை Emerald Headingley மைதானத்தில் தொடங்கவிருக்கும் 3வது டெஸ்டில் விளையாடும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை.
3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் தொடர்ந்து இருப்பார் மற்றும் இங்கிலாந்து மருத்துவ குழுவுடன் தனது சிகிச்சையை தொடருவார்.
3வது டெஸ்ட் போட்டியின் முடிவில் 31 வயதான மார்க் வுட் உடல்நிலை குறித்து மதிப்பீடு செய்யப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டி போட்டியில் மார்க் வுட் முதல் இன்னிங்ஸில் (2) , 2வது இன்னிங்ஸில் (3) என மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.