மஸ்க் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை; சண்டையை விட்டுவிட முடிவுசெய்த ஜுக்கர்பெர்க்
எக்ஸ் (ட்விட்டர்) உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா முதலாளி மார்க் ஜுக்கர்பெர்க் இடையேயான போட்டி கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப உலகில் பேசப்பட்டு வருகிறது.
தனக்கும் ஜுக்கர்பெர்க்கிற்கும் இடையிலான சண்டை (Cage Fight) சமூக வலைத்தளமான X-ல் நேரலையாகக் காண்பிக்கப்படும் என்று மஸ்க் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் இந்த சண்டைக்கான சவாலை மஸ்க் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஜுக்கர்பெர்க் கூறுகிறார்.
எலான் மஸ்க் எப்போதாவது போட்டியிடுவதில் தீவிரமாக இருந்தால், என்னை எங்கு தேடுவது என்பது அவருக்குத் தெரியும். இல்லையெனில், அதை விட்டுவிட வேண்டிய நேரம் இது' என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.
போட்டியை தீவிரமாக எடுத்துக்கொள்பவர்கள் மீது கவனம் செலுத்தப் போவதாகவும் ஜூக்கர்பெர்க் அறிவித்தார்.
ஜியு-ஜிட்சு சாம்பியனான ஜுக்கர்பெர்க்குடன் கேஜ் மேட்ச் போட்டிக்கு தயாராகி வருவதாக ஜூன் 20 தனது பதிவில் மஸ்க் கூறியபோது பிரச்சனை தொடங்கியது.
ஜுக்கர்பெர்க் தான் வென்ற போட்டிகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். போட்டிக்கான தளத்தை அனுப்புமாறு கேட்டார். அதற்கு மஸ்க் 'வேகாஸ் ஆக்டகன்' என்று பதிலளித்தார். இது கலப்பு தற்காப்புக் கலைகள் (MMA) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் நிகழ்வு மையமாகும்.
மார்க் ஜுக்கர்பெர்க்குடனான தனது போர் X-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்த நேரலையில் கிடைக்கும் வருமானம் முன்னாள் படைவீரர்களுக்கான நிதி உதவிக்கு பயன்படுத்தப்படும் என்றார். ஆனால் மஸ்க் கடந்த வாரம் தனது கழுத்து மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜுக்கர்பெர்க்கின் இந்த பதிவு வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Zuckerberg Musk Cage Fight, Musk Cage Fight Challenge, cage fight between Elon Musk and Mark Zuckerberg, Elon Musk Mark Zuckerberg cage fight