எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக ஜூக்கர்பர்க்கின் திரெட்ஸ்! வெளியான அறிவிப்பு
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது புதிய சமூக வலைதள சேவை தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார்.
ட்விட்டருக்கு போட்டியாக புதிய சேவை தளம்
உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளமாக ட்விட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எலான் மஸ்க் இதனை வாங்கிய பின்னர் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
 
 
அதனைத் தொடர்ந்து மெட்டாவின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியானது.
திரேட்ஸ் (Threads) என பெயரிடப்பட்ட இந்த புதிய சமூக வலைதள சேவை குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி வந்தது.
 Stephen Lam / Reuters file
 Stephen Lam / Reuters file
திரெட்ஸ்
இந்நிலையில், ஜூக்கர்பர்க்கின் திரெட்ஸ் சூலை 6ஆம் திகதி அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை இன்ஸ்டாகிராம் போன்ற தோற்றத்தில் இருக்கும் எனவும், ஆனால் பயன்பாடு ட்விட்டர் போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூலை 6ஆம் திகதி முதல் இது download செய்ய கிடைக்கலாம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்த தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்ட்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட புளூஸ்கை, மாஸ்டோடன் போன்றே திரெட்ஸ் சேவையும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 Christoph Dernbach/dpa via AP
 Christoph Dernbach/dpa via AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        