ஒவ்வொருவருக்கும் 4.32 கோடி! மார்க் ஜூக்கர்பெர்க்கின் அதிரடி முடிவு..அதிர்ச்சியில் ஊழியர்கள்
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தமது நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், பல இடங்களில் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தமது நிறுவன செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை என 3,600 மென்பொறியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
நீக்கப்படும் ஊழியர்களுக்கு பதிலாக அவர் AI தொழில்நுட்பத்தை சேர்க்க உள்ளாராம். அத்துடன் வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு தலா ரூ.4.32 கோடி இழப்பீடு வழங்க உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய ஊழியர்களை உள்ளே கொண்டு வருவதற்காகவும், அசாத்திய திறமைசாலிகளைக் கொண்ட நிறுவனமாக உருவாக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 21,000 பேரை மெட்டா வேலையை விட்டு நீக்கியிருந்தது.
அதாவது எனது நிறுவனத்தில் 25 சதவீதம் பேரை அப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் செயல்திறனின் அடிப்படையில் பணி நீக்கம் செய்வது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த அறிவிப்பு மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |