உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய மாபெரும் தொழிலதிபர்
உலகின் மிகப் பாரிய பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை () பின்னுக்குத் தள்ளி, மெட்டா நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் () முதலிடம் பிடித்துள்ளார்.
Forbes-இன் கூற்றுப்படி, Bernard Arnault, Elon Musk மற்றும் Jeff Bezos ஆகியோர் உலகின் மிகப்பாரிய பணக்காரர்களாக உள்ளனர், அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இப்போது மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளனர்.
தற்போது, மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு $165 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 51,98,602 கோடி) ஆகும்.
இதனால் அவர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை விட பணக்காரர் ஆனார்.
Metaவின் பங்கு விலையில் ஏற்பட்ட 22 சதவீதம் உயர்வு அவரை 28 பில்லியன் பணக்காரராக்கியது.
நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு, மெட்டா பங்குகள் 10% உயர்ந்தன. இப்போது 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு 169 பில்லியன் டொலர்களைத் தாண்டியது. இது Bloomberg Billionaires Index-இல் மார்க் ஜுக்கர்பெர்க்கை நான்காவது இடத்திற்கு உயர்த்தி, பில் கேட்ஸை வீழ்த்தியது.
மார்ச் மாதத்தில் வணிகம் அதன் முதல் ஈவுத்தொகையை விநியோகிக்கும் போது ஜுக்கர்பெர்க் சுமார் $174 மில்லியன் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு மேலும் உயரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mark Zuckerberg surpasses Bill Gates, Mark Zuckerberg net worth, Worlds fourth richest person Mark Zuckerberg, Meta CEO Mark Zuckerberg