ஒவ்வொரு முறையும் காலண்டரில் குறித்து வைத்து கொள்வான்! சிறுமி சொன்ன தகவலால் அதிர்ந்த பொலிசார்
அமெரிக்காவில் ஒவ்வொரு முறையும் குற்றச்செயலில் ஈடுபடும் போதும் காலண்டரில் அதை குறித்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயின் கவுண்டியை சேர்ந்தவர் ஜெரிமி டேனியல் (40). இவர் கடந்த 2021 மார்ச் மாதத்தில் இருந்து 2022 பிப்ரவரி வரை 7 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக சிறுமி தனது பாட்டியிடம் பலமுறை சொல்லியும் அவர் காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் தற்போது டேனியலின் செயல்கள் அம்பலமாகியுள்ளது.
மேலும் ஒவ்வொரு முறை தன்னிடம் டேனியல் அத்துமீறும் போது அதை காலண்டரில் குறித்து வைத்து கொள்வார் என சிறுமி பொலிசாரிடம் கூறியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையடுத்து டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் தொகையாக $500,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.