சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவினை மேகன் மெர்க்கல் புறக்கணிக்க காரணம் இது தான்: பிரபலம் வெளிப்படை
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு மேகன் மெர்க்கல் கலந்துகொள்வில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதன் காரணம் தொடர்பில் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
முடிசூட்டு விழாவில் மேகன் மெர்க்கல்
மேகன் மெர்க்கலின் Finding Freedom என்ற நூலின் இணை ஆசிரியரான Omid Scobie என்பவரே தற்போது அவர் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளாதது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
@getty
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் முடிவை இளவரசர் ஹரி அறிவித்த நிலையில், அவரது மனைவி மேகன் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
இந்த நிலையிலேயே Omid Scobie என்பவர் மேகன் மெர்க்கல் முடிசூட்டு விழாவிற்கு வருகை தராதது குறித்து தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இளவரசர் ஹரி முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளதுடன், குழந்தைகளை கவனிக்கும் பொருட்டு, மேகன் மெர்க்கல் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மே 6ம் திகதி சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மட்டுமின்றி, குட்டி இளவரசர் ஆர்ச்சியின் நான்காவது பிறந்தநாளும் அன்று தான். இதனாலையே, ஹரி - மேகன் தம்பதி முடிவெடுப்பதில் தாமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
@getty
ராஜ குடும்பத்திற்கு சங்கடம்
மேலும், Omid Scobie தெரிவிக்கையில், குட்டி இளவரசர் ஆர்ச்சியின் நான்காவது பிறந்தநாள் காரணமாகவே, முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் முடிவை அறிவிப்பதில் ஹரி - மேகன் தம்பதி தாமதப்படுத்தியுள்ளனர்.
ஹரி மட்டுமே தற்போது முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். மட்டுமின்றி, இளவரசர் ஹரி தமது Spare நூலினை வெளியிட்டு, ராஜ குடும்பத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹரிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.
Image: SWNS
ஆனால் மார்ச் 4ம் திகதி ஹரி - மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுத்துள்ளதை அரண்மனை நிர்வாகம் உறுதி செய்தது. அதன் பின்னர், ஹரி- மேகன் தம்பதி அழைப்பை ஏற்குமா எனவும் கேள்வி எழுந்தது.
பலர், ஹரி - மேகன் தம்பதி அழைப்பை ஏற்க வாய்ப்பில்லை என்றே கருதினர்.
இந்த நிலையில் தான் தற்போது, மே 6 ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்து கொள்வார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.