அரண்மனையில் இருந்து தொடர்பு கொண்ட இருவர்... அதிசயமாக மனம் மாறிய மேகன் மெர்க்கல்
அமெரிக்காவில் குடியிருக்க முடிவு செய்ததும் அவர்களின் மதிப்புமிக்க HRH பட்டத்தை கைவிடும் கட்டாயம்
தமது பிள்ளைகள் ராஜகுடும்பத்து வாரிசுகள் என்பதால் அதற்குரிய பட்டத்துடன் அறியப்படுவதே சிறப்பு
தனது இரு பிள்ளைகள் தொடர்பில் பிரித்தானிய ராஜகுடும்ப மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையை முதன் முறையாக மேகன் மெர்க்கல் எற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன்மெர்க்கலிடம் தொடர்ந்து நட்பு பாராட்டி வருபவர்கள் இளவரசி பீட்ரைஸ் மற்றும் அவரது சகோதரி யூஜின் ஆகியோரே. தற்போது இவர்களின் முக்கியமான கருத்தை மேகன் மெர்க்கல் ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
Credit: The Mega Agency
இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியிருக்க முடிவு செய்ததும் அவர்களின் மதிப்புமிக்க HRH பட்டத்தை கைவிடும் கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும், அவர்களுக்கு பிரபு என்ற அடைமொழியில் அறியப்படும் வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டது. தற்போது சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டதும், இவர்களின் பிள்ளைகள் இருவரும் இளவரசர் மற்றும் இளவரசி என அடையாளப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
@getty
ஆனால், HRH பட்டம் மட்டும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஒப்புதலை மன்னர் சார்லஸ் தான் அளிக்க வேண்டும். பொதுவாக இந்த பட்டங்களில் தமக்கு பெரிதாக ஈர்ப்பு எதும் இல்லை எனவும், அவர்கள் சாதாரணமாக அறியப்பட்டால் போதும் எனவும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெருமையாக பேசி வந்துள்ளார் மேகன் மெர்க்கல்.
ஆனால், தற்போது தமது பிள்ளைகள் ராஜகுடும்பத்து வாரிசுகள் என்பதால் அதற்குரிய பட்டத்துடன் அறியப்படுவதே சிறப்பு என்பதை மேகன் மெர்க்கல் புரிந்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Credit: The Mega Agency
இதற்கு காரணமாக கூறப்படுவது, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் அவரது சகோதரி யூஜின் ஆகியோர் அளித்த ஆலோசனையே என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தின் தகவல் சேகரிப்பவர்கள்.
தங்களுக்கு இனி அந்த பட்டங்கள் தேவை இல்லை என்றாலும், தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக அந்த பட்டங்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுவதாக இருக்கும் என மேகன் மெர்க்கல் நம்புவதாக கூறுகின்றனர்.