சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! 58 பந்தில் சதம் விளாசல்
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
மார்க்ரம் அதிரடி
செஞ்சூரியனில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, கேப்டன் மார்க்ரமின் ருத்ர தாண்டவ ஆட்டத்தினால் 213 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 58 பந்துகளில் 100 ஓட்டங்கள் (6 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார். ஜோர்டான் ஹெர்மன் 36 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார். ஜோபர்க் தரப்பில் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Aiden Markram led from the front with a brilliant captain’s 100!
— Betway SA20 (@SA20_League) February 9, 2023
Over to you now Stubbsy... #Betway #SA20 | @Betway_India @AidzMarkram pic.twitter.com/LgiontbB0r
சன்ரைசர்ஸ் வெற்றி
பின்னர் ஆடிய ஜோபர்க் அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஜோபர்க் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 54 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்தார். சதம் விளாசிய மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
@SA20/Sportzpics/Gallo Images