மே.தீவுகளுக்கு எதிராக 150 ஓட்டங்கள் விளாசிய அவுஸ்திரேலிய வீரர்!
பெர்த் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே 154 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
8வது டெஸ்ட் சதம்
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. டேவிட் வார்னர் 5 ஓட்டங்களில் சீல்ஸ் பந்துவீச்சில் போல்டானார்.
பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே, மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நங்கூர ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
@ICC
அரைசதம் கடந்த கவாஜா 65 ஓட்டங்களில் மேயெர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில் லபுசாக்னே 8வது டெஸ்ட் சதத்தினை அடித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்மித் அரைசதம் அடித்தார். 293 ஓட்டங்கள் குவிப்பு முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் குவித்தது.
@cricketcomau
மார்னஸ் லபுசாக்னே 154 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 59 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் சீல்ஸ் மற்றும் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
@cricketcomau