முதல் சதமே 164 பந்துகளில் 157 ஓட்டங்கள்! வங்காளதேசத்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்
Marques ackerman maiden test ton vs bangladesh: வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவின் மார்கியூஸ் அக்கர்மேன் முதல் சதம் அடித்தார்.
தி வான்டரெர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்டில், தென் ஆப்பிரிக்காவின் மார்கியூஸ் அக்கர்மேன் 157 ஓட்டங்கள் விளாசினார்.
முதல் டெஸ்ட் போட்டி
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தி வான்டரெர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் குவித்தது. தவ்ஹித் ஹிரிடோய் 137 ஓட்டங்களும், லித்தன் தாஸ் 120 ஓட்டங்களும் எடுத்தனர்.
ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளும், டேன் பேட்டர்சன் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜென்சென் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மார்கியூஸ் அக்கர்மேன்
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் சதம் அடித்த மார்கியூஸ் அக்கர்மேன் (Marques Ackerman) 164 பந்துகளில் 1 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 157 ஓட்டங்கள் விளாசினார். ஸுபைர் ஹம்ஸா 12 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் எடுத்தார்.
