திருமணம் ஆகாதவர்கள் கவனத்திற்கு., ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை
திருமணமாகாதவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவின் University of Miami Miller School of Medicine-இன் Sylvester Comprehensive Cancer Center ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் 4 மில்லியன் புற்றுநோய் நோயாளிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. திருமணமாகாதவர்கள், திருமணமானவர்களை விட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என கண்டறியப்பட்டது.
குறிப்பாக HPV தொற்றுடன் தொடர்புடைய புற்றுநோய்கள் திருமணமாகாதவர்களில் அதிகமாகக் காணப்பட்டன.

ஆய்வாளர்கள் கூறியதாவது: திருமண நிலை என்பது சமூக ஆதரவு, பொருளாதார நிலைத்தன்மை, மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. திருமணமானவர்கள், சிகிச்சையை முறையாக பின்பற்றுவதற்கும், ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவதற்கும் அதிக வாய்ப்பு பெறுகிறார்கள்.
திருமணமாகாத ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் 70 சதவீதம் அதிகம் என்றும், திருமணமாகாத பெண்களுக்கு அது 85 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, கருப்பை மற்றும் endometrial புற்றுநோய் அபாயம் திருமணமாகாத பெண்களில் அதிகம்.
ஆய்விலிருந்து முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது
திருமணம் புற்றுநோயைத் தடுக்காது. ஆனால், திருமண நிலை ஒரு முக்கிய சமூக காரணி எனக் கருதப்பட வேண்டும். திருமணமாகாதவர்கள், மருத்துவ பரிசோதனைகள், புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |