மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த ஊர்மக்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தின் தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.
மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம்
தூத்துக்குடி, எம்.சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் தங்கம். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மகள் இசக்கிஅம்மாள் (39). இவர் மாற்றுத்திறனாளி.
இவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து இசக்கி அம்மாளுக்கு ஊரில் உள்ள மக்கள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார்கள்.
சென்னை, மணலியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சதீஷ்குமார் (41) என்பவரும் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தார்.
இதை அறிந்த எம்.சவேரியார் புரத்தைச் சேர்ந்த மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து, எம். சவேரியார்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயலட்சுமி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளரும், 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.