12 வயதில் திருமணம், உறவினர்களால் துஸ்பிரயோகம்... சொந்தமாக தொழில் தொடங்கியவரின் தற்போதைய நிலை
மராட்டிய மாநிலத்தில் பிறந்த கல்பனா சரோஜ் 12 வயதிலேயே கட்டாய திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு, கணவரின் குடும்பத்துடன் மும்பையில் ஒரு சேரியில் வசித்து வந்தார்.
கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து
நீண்ட காலமாக கணவரின் உறவினர்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். ரெபத்கேட் கிராமத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த அவரது தந்தைக்கு தகவல் தெரியவந்து, இறுதியில் கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து மீட்கப்பட்டார்.
ஆனாலும், அவரது போராட்டம் மட்டும் நிற்கவில்லை, அவர் தமது சொந்த கிராமத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டார், இறுதியில் தனது வாழ்க்கையை முடிக்க அவர் முடிவு செய்தார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர், தற்போது ஒரு தொழில்முனைவோராகவும் TEDx பேச்சாளராகவும் வலம் வருகிறார். மட்டுமின்றி, கமானி டியூப்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
மிகவும் அடிமட்டத்தையும்
வாழ்க்கையின் மிகவும் அடிமட்டத்தையும் அதன் உச்சத்தையும் பார்த்தவர் கல்பனா சரோஜ். கேஎஸ் ஃபிலிம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய கல்பனா, தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி படங்களை வெளியிட்டார்.
அத்துடன், தனது கட்டுமான நிறுவன வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக தனது தொடர்புகளை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து பணியாற்றினார்,
விரைவில் கமானி ட்யூப்ஸில் பணியாற்றத் தொடங்கினார். கல்பனாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என்பது சுமார் ரூ.917 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |