தன்னலமற்றவர்கள்... பிரித்தானிய தன்பாலின தம்பதிக்கு குடும்பத்தார் கண்ணீர் அஞ்சலி
பிரித்தானியாவில் புத்தாண்டு விடுமுறையை கழிக்க சென்ற பெண் தன்பாலின தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குடும்பத்தார் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பெண் தன்பாலின தம்பதி
பிரித்தானியாவின் கென்ட் பகுதியை சேர்ந்த பெண் தன்பாலின தம்பதியான ரேச்சல் மற்றும் ஹெலன் பேச்சிங் (33, 52) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டவர்கள்.
@PA
புத்தாண்டு விடுமுறையை கழிக்கும் வகையில் மலையேறும் முடிவுக்கு வந்த இருவரும் Brecon Beacons பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், உறவினர்கள் பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து நாட்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் அருவி நீரில் இருந்து இருவரது சடலங்களையும் மீட்டுள்ளனர். இருவரும் எவ்வாறு அருவியில் காணப்பட்டனர் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாங்க முடியாத துயரம்
ரேச்சல் மற்றும் ஹெலன் பேச்சிங் தம்பதியின் திடீர் மறைவு தங்களுக்கு தாங்க முடியாத துயரத்தை அளித்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் தன்னலமற்றவர்கள் எனவும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@Athena
இரு பெண்களில் ஒருவரது சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இன்னொருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அருவி அமைந்துள்ள பகுதி பாதுகாப்பானது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆனால் ஆபத்து இல்லாத அருவி உலகில் எங்கும் காண முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.