பிரெஞ்சு அரச மாளிகையில் திருமணம்... ரூ 138,000 கோடி வணிக சாம்ராஜ்யத்திற்கு வாரிசு: யாரிவர்?
எஃகு தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியரான லட்சுமி நிவாஸ் மிட்டல் உலக பணக்காரர்களில் ஒருவர். லட்சுமி மிட்டலின் மகளான வனிஷா மிட்டல் என்பவருக்கு தான், பிரெஞ்சு அரச மாளிகையில் திருமணம் நடந்தது.
நாளேடுகளில் பரவலாக
2004 ஜூன் மாதம் LNM ஹோல்டிங்ஸின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்ற வனிஷா மிட்டல் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் டிசம்பர் 2004ல், மிட்டல் ஸ்டீலின் இயக்குநர்கள் குழுவில் வனிஷா நியமிக்கப்பட்டார்.
1980ல் பிறந்த வனிஷா மிட்டல் ஐரோப்பிய வணிகப் பள்ளியில் இளங்கலை அறிவியல் பட்டத்தை முடித்தார். 2011 ஏப்ரல் மாதம் Aperam என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது 43 வயதாகும் வனிஷா மிட்டல் 2004ல் அமித் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்ட போது, நாளேடுகளில் பரவலாக பேசப்பட்டார். அவரது திருமணமானது பிரான்சின் Versailles அரண்மனையில் வைத்து நடந்துள்ளது.
மகளின் திருமணத்திற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார் லட்சுமி மிட்டல். 2004 காலகட்டத்தில் அந்த தொகையின் இந்திய மதிப்பு ரூ 240 கோடி என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போது அது இந்திய மதிப்பில் ரூ 550 கோடி என்றே கூறுகின்றனர்.
மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்று
வனிஷா மிட்டலின் திருமணம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்று என்றே கூறப்படுகிறது. மொத்தம் 6 நாட்கள் நீண்ட திருமண விழாவில் பிரபல பாடகி Kylie Minogue இசை நிகழ்ச்சி முன்னெடுத்துள்ளார்.
30 நிமிட நிகழ்ச்சிக்கு 330,000 டொலர் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஷாருக் கான் உள்ளிட்ட இந்தி திரை உலகின் பிரபலங்கள் பலர் குறித்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
வனிஷா மிட்டலின் தந்தை லட்சுமி மிட்டலின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 1.38 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது. 2020ல் மட்டும் ArcelorMittal நிறுவனத்தின் வருவாய் என்பது 53 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |