திருமணமானவர் லிவ் இன் உறவில் இருந்தால் குற்றமல்ல: அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Uttar Pradesh Married
By Thiru Mar 27, 2026 09:44 AM GMT
Report

திருமணமானவர் லிவ் இன் உறவில் இருந்தால் குற்றமல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ஜோடி, பெண்ணின் தாயார் அளித்த புகாரை ரத்து செய்ய கோரியும், பாதுகாப்பு கோரியும் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பை வாசித்த நிலையில், வயது வந்து பெண்ணுடன் ஏற்கனவே திருமணமான ஒருவர் லிவ் இன்(Live in) உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமானவர் லிவ் இன் உறவில் இருந்தால் குற்றமல்ல: அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு | Married Man In Live In Relationship Court Judgeme

நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், குடிமக்களின் உரிமைகள் அடிப்படையிலேயே நீதித்துறை தன் கடமையை செய்யும் என்றும், சமூகக் கருத்துக்கள் அல்லது ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தன்னை சிவன் என்று கூறி ஏமாற்றிய போலி சாமியார்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

தன்னை சிவன் என்று கூறி ஏமாற்றிய போலி சாமியார்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மனுதாரர் இருவரும் வயது வந்தவர்கள் மற்றும் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வாழ்வது என்பது எந்தவொரு குற்றம் நடந்ததற்கான ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி

கடந்த ஜனவரி மாதம் அனாமிகா(18) மற்றும் நேத்ரபால் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அனாமிகாவின் தாய் காந்தி, நேத்ரபா மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 87-ன் கீழ் புகார் அளித்து இருந்தார்.

மேலும்  அனாமிகா மற்றும் நேத்ரபால் இருவருக்கும் அனாமிகாவின் குடும்பத்தினர் தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

தீர்ப்பில் காவல்துறையினர் அனாமிகா மற்றும் நேத்ரபால் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அடுத்த விசாரணை ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US