இன்ஸ்டா ரீல்ஸ்க்கு லைக் போட்ட இளைஞருடன் பழகிய திருமணமான பெண்: கடைசியில் ஏற்பட்ட விபரீதம்
தமிழக மாவட்டம் திருப்பத்தூரில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு லைக் செய்த இளைஞருடன், ஏற்கனவே திருமணமான பெண் பழகியபோது கடைசியில் விபரீதம் ஏற்பட்டது.
இன்ஸ்டா இளைஞருடன் பழக்கம்
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே உள்ள காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி மற்றும் நதியா. இதில் மனைவி நதியா, சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார்.
அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரர்(20) என்ற இளைஞர், நதியா இன்ஸ்டாகிராமில் போடும் வீடியோவிற்கு தொடர்ந்து லைக் செய்து வந்துள்ளார். பின்பு, அவருடன் பேசி பழகியும் வந்துள்ளார்.
நகை பறிப்பு
இதனைத்தொடர்ந்து, வேலை விடயம் காரணமாக நான் திருப்பத்தூர் வருகிறேன், உங்களை பார்க்க வேண்டும் என்று பிரகதீஸ்வரர் கூறியுள்ளார். அதற்கு, நதியாவும் கணவருக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் கடந்த 27 -ம் திகதி பிரகதீஸ்வரரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் தங்கமா என்று பிரகதீஸ்வரர் கேட்டுள்ளார். உடனே, தாலிச் சரடு மட்டும் தங்கம் என நதியா கூறியுள்ளார். பின்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் தாலிச் சரட்டை கழுத்தில் இருந்து பறித்து விட்டு பிரகதீஸ்வரர் தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து, பொலிஸாரிடம் நதியா புகார் அளித்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நகையை பிரகதீஸ்வரரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |