என்னை பார்க்க வர மாட்டீங்களா? காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
காதல் திருமணம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆனத்தில் இருந்து தாய், தந்தையை பிரிந்து பார்க்காமல் இருந்த கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த பின்னராவது அவர்கள் வருவார்கள் என நினைத்தார்.
பெற்றோர் வராததால் மன உளைச்சல்
ஆனாலும் தாய் தந்தை வந்து பார்க்காததால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து கெளசல்யாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பெற்றோர் பார்க்காத மன வேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.