பிரான்ஸ் நகரை உலுக்கிய போதைப் பொருள் கொலைகள்: 50 முறை கத்தியால் குத்தப்பட்டு 15 வயது சிறுவன் பலி
தெற்கு பிரான்சின் மார்சில்லே-வில் போதை மருந்து தொடர்பான அடுத்தடுத்த இரண்டு கொலைகளை ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
15 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
தெற்கு பிரான்சின் மார்சில்லே-வில்(Marseille) போதை மருந்து தொடர்பான 15 வயது சிறுவன் 50 முறைக்கும் மேல் கத்தியால் குத்தப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 வயது சிறுவன் புதன்கிழமை கொல்லப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய 14 வயது சிறுவனால் வெள்ளிக்கிழமை 36 வயது கால்பந்து வீரர் நெசிம் ராம்டேன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தொடர்பான இந்த இரட்டை கொலை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது, அதிகாரிகள் இந்த வழக்கை “முன்னோடியில்லாத இரக்கமின்மை” என்று விவரித்துள்ளனர்.
இந்த இரண்டு கொலைகளுடன் சேர்த்து மார்சில்லே-வில் இந்த ஆண்டு மட்டும் போதைப் பொருள் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
விளம்பரம் மூலம் ஆள் சேர்க்கும் கும்பல்
இந்நிலையில், மார்சில்லே-வில் போதைப்பொருள் கும்பல் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் போதைப் பொருள் விற்பனைக்கு ஆட்களை சேர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சேர்க்கப்படும் இளம் சிறுவர்கள் போதைப் பொருள் விற்பனைக்கு மட்டுமல்லாமல், இரக்கமற்ற மற்றும் சிந்தனையற்ற கொலைகளுக்கும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |