டி20யில் அரைசதம் விளாசி.,6 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த வீரர்
டி20 பிளாஸ்ட் போட்டியில் மார்ட்டின் ஆன்டர்சன் 6 விக்கெட்டுகள் கைப்பற்ற, டெர்பிஷிரே அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்ட்டின் ஆன்டர்சன் அதிரடி
டெர்பிஷிரே மற்றும் லீசெஸ்டர்ஷிரே அணிகள் மோதிய டி20 பிளாஸ்ட் போட்டி கிரேஸ் ரோட்டில் நடந்தது.
Coolest Catch Ever. A One Handed No Look Catch By Martin Andersson. He Didn't Even Had To Do Any Effortpic.twitter.com/ZJhIpLW8Oh
— Aryan Goel 2.0 (@AryanGoelNew) May 27, 2026
முதலில் ஆடிய டெர்பிஷிரே அணியில் மார்ட்டின் ஆன்டர்சன் அதிரடியாக 29 பந்துகளில் 57 ஓட்டங்களும், அனேயுரின் 24 பந்துகளில் 49 ஓட்டங்களும் விளாசினர்.
காலேப் ஜுவெல் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாச, டெர்பிஷிரே அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷிரே அணி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஆஷ்டன் டர்னர், பென் காக்ஸ் கூட்டணி ஓரளவு ஓட்டங்களை சேர்த்தது.
6 விக்கெட்டுகள்
டர்னர் 22 பந்துகளில் 53 ஓட்டங்கள் விளாசியிருந்த நிலையில் மார்ட்டின் ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் காக்ஸ் 34 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து மார்ட்டின் ஆன்டர்சனின் தாக்குதல் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, லீசெஸ்டர்ஷிரே அணி 15.2 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் டெர்பிஷிரே அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்ட்டின் ஆன்டர்சன் 4 ஓவர்கள் வீசி 23 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |