அபார சதம் விளாசிய மார்ட்டின் கப்தில்! திணறும் அயர்லாந்து
அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் சதம் விளாசினார்.
நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்லினில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பவுண்டரிகளை அடித்து நொறுக்கிய அவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 18வது சதத்தினை பதிவு செய்தார். அதன் பின்னர் டெலனி ஓவரில் எல்.பி.டபுள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார்.
PC: Twitter (@BLACKCAPS)
கப்தில் 126 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் எடுத்தார். அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கப்திலுக்கு, முதல் இடத்தை பிடிக்க இன்னும் 3 சதங்களே உள்ளன.
PC: Twitter (@BLACKCAPS)
டெய்லர் 21 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். கப்தில் 192 ஒருநாள் போட்டிகளில் 7,207 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 18 சதங்கள், 38 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
PC: Twitter (@BLACKCAPS)
தற்போது வரை நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.