கேரள குண்டுவெடிப்பு தொடர்பில் சரணடைந்த நபர் - இனவெறி தான் காரணமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நேற்றைய தினம் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு எற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள குண்டு வெடிப்பு
கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கத்தில் மக்கள் திரண்டு இருந்த நேர்த்தில் குண்டு வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழிபாட்டு தலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கூடி இருந்து வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் அந்த அரங்கத்தில் இருந்துள்ளனர்.
#WATCH | Visuals from Ernakulam, Kerala where one person died, and several injured in an explosion at a Convention Centre in Kalamassery https://t.co/hir8k808v2 pic.twitter.com/305HuzA4gg
— ANI (@ANI) October 29, 2023
தீடிரென்று 9 மணியளவில் அடுத்தடுத்து 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
பலி எண்ணிக்கை
நேற்றைய தினம் ஒரு பெண் பலியாகியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் பலியாகி இருகின்றனர் என வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இறந்தவர்களுள் 95 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குண்டு வைத்தவர் யார் என்ற விசாரணையில் ஈடுப்பட்ட பொலிஸார்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக, நான் தான் குண்டு வைத்தேன் என்று கூறி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரளாவை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார்.
பொலிஸாரிடம் சரணடைந்த நபர்
இவர் பொலிஸாரிடம் சரணடைவதற்கு முன்பு Facbook -இல் நேரலை வந்து பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் " ஜெஹோவா விட்செனசஸ் சபையின் போதனைகள் மீது தனக்கு உடன்பாடு இல்லை. அச்சபையின் கருத்துகள் தேசத்திற்கே ஆபத்தானது. தனது புகார்களை அச்சபை கண்டுகொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
#BREAKING: A person identified as Dominic Martin has claimed responsibility for the #KalamasseryBlasts and has surrendered before the Police. On his Facebook Live broadcast, Martin defended his act as a warning against the “anti-national” nature of Jehovah’s Witnesses, a… pic.twitter.com/FK9eyjKL1h
— Siddharth (@DearthOfSid) October 29, 2023
மேலும் ஜெஹோவா விட்னெசஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் மிகச்சிறிய பிரிவாகும். இதை உலகளவில் 85 லட்சம் பேர் மாத்திரமே பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |