மெஸ்ஸியின் அருகில் நின்றபடி எம்பாப்பேவை கிண்டல் செய்த வீரர்! மீண்டும் கிளம்பிய சர்ச்சை
அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினெஸ் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம்பொறித்த குழந்தை பொம்மையை வைத்து கேலி செய்தார்.
வெற்றி ஊர்வலம்
உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீரர்கள் பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். அப்போது மெஸ்ஸிக்கு அருகில் நின்றிருந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் தனது கையில் குழந்தை பொம்மை ஒன்றை ஏந்தியிருந்தார்.
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மார்டினெஸ்
ஆனால் அந்த பொம்மையின் முகம் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் உருவத்தால் பொறிக்கப்பட்டிருந்தது. இது அவரை கிண்டல் செய்யும் வகையில் அமைந்ததால், மார்டினெஸ் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக, தங்க கையுறையை வென்ற மார்டினெஸ் அதனை வைத்து ஆபாச செய்கை செய்தது சர்ச்சையானது. கத்தார் உலகக்கோப்பையில் மெஸ்ஸி தங்கப் பந்து விருதையும், எம்பாப்பே தங்கக் காலணி விருதையும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.