2024-ல் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கசப்பான செய்தி., விலை கடுமையாக உயரும்
2023 முடியப் போகிறது. புத்தாண்டு 2024 இன்னும் சில நாட்களில் வருகிறது. வரவும் ஜனவரி முதல் புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு கசப்பான செய்தியாக இருக்கும்.
ஜனவரியில் ஆட்டோ மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துகின்றன.
ஏற்கனவே, Maruti Suzuki India, Hyundai Motor India, Tata Motors, Mahindra and Mahindra, Honda Cars India மற்றும் MG Motor India போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் தங்கள் கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
கார் மாடலின் அடிப்படையில் விலை உயர்வு
ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்துள்ள பொருட்களின் விலை உயர்வால் விலை அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், கார் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், எந்த அளவு விலை உயர்வு என்பது குறித்து எந்த கார் தயாரிப்பு நிறுவனமும் தெளிவுபடுத்தவில்லை. காரின் மொடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.
பொதுவாக, கார் உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறார்கள்.
2024 ஜனவரி முதல் கடுமையாக உயரும் விலை
ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனவரி 2024-ல் தனது கார்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாருதி கூறியுள்ளது.
ஜனவரி 16-ஆம் திகதி இந்திய சந்தையில் புதிய க்ரெட்டாவை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய் நிறுவனம், அதன் வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மறுபுறம், மஹிந்திரா ஜனவரி முதல் Sports Utility Vehicle (SUVகள்) மற்றும் வணிக வாகனங்கள் (commercial vehicles) விலைகளையும் அதிகரிக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Maruti, Hyundai, Tata, Mahindra, Honda, MG cars price increase from January 2024