கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.
ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்திய கார் தொழில்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதில், 2,00,123 வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டன. அதில் 1,93,203 பயணிகள் வாகனங்கள் (PV) மற்றும் 3,920 வணிக வாகனங்கள் (CV) அடங்கும். மேலும், 30,056 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி 1,80,526 வாகனங்களை விற்றிருந்தது. அதற்கு முன் 2025 ஜூலை மாதத்தில் 1,40,570 வாகனங்கள் மட்டுமே விற்றிருந்தது. இதன் மூலம், மாருதி தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்ததாவது: “தற்போது எங்களிடம் சுமார் 1.60 லட்சம் நிலுவையில் உள்ள முன்பதிவுகள் உள்ளன. புதிய பிரெஸ்ஸா (Brezza) ஃபேஸ்லிஃப்ட் தினமும் சுமார் 2,000 முன்பதிவுகளை பெறுகிறது. அதேசமயம், e-விடாரா (e Vitara) மாதத்திற்கு சுமார் 4,000 முன்பதிவுகளை பெறுகிறது” என்றார்.
இந்த சாதனை, இந்திய கார் சந்தையின் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
மாருதி, தனது புதிய மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எதிர்காலத்தில் மேலும் விற்பனையில் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |