இந்தியாவில் அறிமுகமாகும் Maruti Suzuki eVitara - 500 கிமீ ரேஞ்ச் கொண்ட மின்சார SUV
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான Maruti Suzuki, தனது முதல் முழுமையான மின்சார SUV மாடலான eVitara-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
பல எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, Maruti Suzuki eVitara இப்போது டிசம்பர் 2, 2025 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் உறுதிப்படுத்திய தகவலின்படி, இந்த மின்சார வாகனம் 61 kWh பேட்டரி பேக் உடன் வரும்.
இந்த பேட்டரி, ஒரு முழு சார்ஜில் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்திய சந்தைக்கு வரும் மாடலில் AWD dual-motor version கிடைக்காது எனத் தெரிகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்திய EV சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த விலை மைக்ரோ-எலக்ட்ரிக் கார்களிலிருந்து, பிரீமியம் MPV-கள் மற்றும் Luxury EV-க்கள் வரை பல்வேறு வகைகள் தற்போது விற்பனையில் உள்ளன.
இந்நிலையில், Maruti Suzuki-யின் eVitara அறிமுகம், பிரபலமான SUV பிரிவில் மாற்றத்தை வலுப்படுத்தும்.
Maruti Suzuki இதுவரை EV சந்தையில் பங்கேற்காமல் இருந்தது. ஆனால், eVitara அறிமுகம் மூலம், நிறுவனம் இந்திய EV போட்டியில் தனது இடத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த SUV, Tata, Mahindra போன்ற நிறுவனங்களின் மின்சார வாகனங்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இதன் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki eVitara India launch, eVitara 61 kWh battery specs, Maruti eVitara 500 km range SUV, Maruti Suzuki first electric SUV, eVitara AWD dual motor India, Maruti EV vs Tata Mahindra EV, Maruti Suzuki eVitara features 2025, Maruti eVitara price India expected, Maruti Suzuki electric car launch, eVitara Brezza electric version