அபாய எச்சரிக்கை விளக்கு: 39,506 கார்களை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி நிறுவனம்
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 39,506 கிராண்ட் விட்டாரா மொடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
கிராண்ட் விட்டாரா
மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா எஸ்யுவி(Grand Vitara SUV) கார் மொடலில் எரிபொருள் நிலை காட்டி (fuel level indicator) மற்றும் Speedmeter assemblyயில் எச்சரிக்கை விளக்கு (warning light) ஆகிய தொழில்நுட்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. 
இதனைத் தொடர்ந்து, தற்போது மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனம் சாத்தியமான சிக்கலை நிவர்த்தி செய்ய 39,506 கார்களை தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கிராண்ட் விட்டாரா கார்களுக்கான மிகப்பெரிய திரும்பப் பெறுதல் இதுவாகும்.
வாகனங்களைப் பாதிக்கிறது
மேலும் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த திரும்பப் பெறுதல் என்பது டிசம்பர் 9, 2024 மற்றும் ஏப்ரல் 29, 2025க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பாதிக்கிறது.
மாருதி சுஸுகி வெளியிட்ட ஒரு அறிக்கையில், "speedometer assemblyயில் உள்ள எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு, எரிபொருள் நிலையை துல்லியமாக பிரதிபலிக்காமல் போகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |