2031-ஆம் ஆண்டுக்குள் 6 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, 2030-31 நிதியாண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும் ஆறு புதிய மின்சார வாகனங்களின் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் (AGM) நிறுவனம் வெளியிட்டது.
மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா, இந்தியாவின் கார்பன் நியுட்ராலிட்டி இலக்குகளை அடைய கம்பெனி செய்யும் நடவடிக்கைகளை விளக்கினார்.
நிறுவனம், ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி, 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள பாரத் மோபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய மின்சார வாகனம், eVX என்ற கான்செப்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது Tata Curvv EV, Hyundai Creta EV மற்றும் Honda Elevate EV போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.
மேலும், இந்த மின்சார வாகனத்திற்கு 500 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கப்படும் என்று தெரிகிறது, ஆனால், பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
மேலும், இது மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பெரிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மற்றும் மற்ற நவீன வசதிகளை உட்பட வாகனம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மாருதி சுசுகி, மின்சார வாகனங்களின் மேம்பாட்டில் மட்டுமின்றி, குறைந்த விலையில் சிறிய கார்கள் தயாரிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |