ரூ.5.65 லட்சத்தில் Maruti Suzuki அறிமுகம் செய்துள்ள WagonR Waltz
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தனது என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் WagonR காரின் Waltz எடிஷனை இன்று (செப்டம்பர் 20) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
WagonR காரின் லிமிடெட் எடிஷன் LXI, VXI மற்றும் ZXI வேரியண்ட்களில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு சிஎன்ஜி எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரின் ஆரம்ப விலை ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) என நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும், நிறுவனம் அதன் அனைத்து வகைகளின் விலையையும் வெளியிடவில்லை.
இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜைத் தருகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஸ்டாண்டர்டு மாடலின் விலை ரூ.5.54 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
இந்த கார் Maruti Celerio, Tata Tiago மற்றும் Citroen C3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. Maruti WagonR Waltz 7 ஒற்றை மற்றும் 2 dual tone வண்ண விருப்பங்கள் கிடைக்கிறது.
மேலும், இதில் சில புதிய பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. Front fog lamps, wheel arch cladding, bumper protectors, side skirts, body side mouldings, chrome grille inserts மற்றும் door visors ஆகியவை இதில் அடங்கும்.
இது தவிர, காரின் முன்புறத்தில் ஹாலோஜன் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் மற்றும் பின்புறத்தில் ஹாலோஜன் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Limited-Edition Maruti Suzuki WagonR Waltz, Maruti Suzuki WagonR Waltz price Rs.5.65 lakh