90 ஆயிரம் கார்களில் இந்த பிரச்சனையா? கார்களை திரும்ப பெறும் மாருதி
மாருதி சுசுகி நிறுவனம், தன்னுடைய 90 ஆயிரம் கார்களை பழுதின் காரணமாக திரும்ப பெறுவதாக கூறியுள்ளது.
என்ன தான் பிரச்சனை
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கார்களை வழங்கி நம்பிக்கையையும் பெற்றுள்ளது.அதுமட்டுமில்லாமல் லட்சக்கணக்கான கார்களை மாதம் தோறும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், காரில் ஸ்டேரிங் டை ராடில் உள்ள பிரச்னை காரணமாக 87,599 கார்களை திரும்ப பெறும் முடிவை மாருதி எடுத்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மாருதி கார்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள சர்வீஸ் சென்டரில் சரி செய்ய திரும்ப அழைத்துள்ளது.
அதாவது, மாருதி நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை தயாரித்த எக்ஸ்பிரஸ் மற்றும் ஈகோ மாடல்களின் கார்களில் பழுது இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் என்ன சொல்கிறது?
மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் தயாரிக்கப்பட்ட மாருதி கார்களில் ஸ்டேரிங் டை ராடில் பிரச்சனை இருப்பதாக மாருதி நிறுவனம் சந்தேகிக்கிறது.
அதனால், தங்களது கார்களில் இந்த பிரச்னை தென்பட்டால் அதனை சரிசெய்து தரவும் நிறுவனம் தயாராக இருக்கிறது. இந்த பிரச்சனையால் தான் கார்களை ஷோ ரூமிற்கு திரும்ப அழைத்து செக் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளது.
அப்போது, எந்தவித பிரச்சனையும் இல்லை என்றால் உரிமையாளரிடம் கார் மீண்டும் ஒப்படைக்கப்படும். இது நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |