காரசாரமான சுவையில் மசாலா சாதம்.. ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!
வார இறுதி நாள் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவை தேடுவார்கள்.
ஆனால் மார்கழி மாதம் வந்துவிட்டால் சிலர் சைவ உணவை தான் சாப்பிடுவார்கள். அந்தவகையில் காரசாரமான சுவையில் மசாலா சாதம் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா தூள் செய்ய
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 8
- பூண்டு - 6 பற்கள்
- புளி
- துருவிய தேங்காய் - 1 கப்
- பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- கல் உப்பு - 1 தேக்கரண்டி
மசாலா சாதம் செய்ய
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- வேர்க்கடலை கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- அரைத்த மசாலா தூள்
- வேகவைத்த சாதம்
- உப்பு
- நெய்
செய்முறை
1. ஒரு பானில் எண்ணெய், கடலை பருப்பு சேர்க்கவும்.
2. கடலை பருப்பு வறுபட்டதும் சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், அதில் பூண்டு, புளி சேர்த்து வறுக்கவும்.
4. இப்போது துருவிய தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
5. பெருங்காய தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும்.
6. வறுத்த பொருட்களை தட்டில் மாற்றி ஆறவிடவும்.
7. ஆறியதும் பொருட்களை மிக்சி ஜாடிக்கு மாற்றி சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
8. அகலமான கடாயில் எண்ணெய் சேர்க்கவும். வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
9. பிறகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
10. பின்னர் கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
11. இப்போது அரைத்த மசாலா தூள் சேர்க்கவும்.
12. கடாயில் சாதம் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
13. நெய் சேர்க்கவும்.
14. மசாலா சாதம் அப்பளம் மற்றும் வத்தல் உடன் பரிமாற தயாராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |