Masala tea: வீடே மணக்கும் மசாலா டீ.., இனி இப்படி போட்டு குடிங்க
தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது. தேநீர் குடிப்பதனால் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் சாதாரண டீ குடிப்பதற்கு பதிலாக மசாலா டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு வந்தடைகின்றன.
வீடே மணக்கும் சுவையான மசாலா டீ எப்படி செய்வதென்று பாப்போம்.
தேவையான பொருட்கள்
- ஏலக்காய்- ½ கப்
- சுக்கு- 1 துண்டு
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 1 ஸ்பூன்
- ஜாதிக்காய்- 1 துண்டு
- பால்- 1½ கப்
- தண்ணீர்- ½ கப்
- டீ தூள்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் ஏலக்காய், சுக்கு, மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்த பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அதில் அரைத்த மசாலா பொடி, டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து 3 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
பின் இதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி நன்கு ஆற்றி பரிமாறினால் சுவையான மசாலா டீ தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |