முகத்தில் பாதுகாப்பு மாஸ்க்... எம்பாப்பே வருத்தம்
யூரோ கிண்ணம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளவிருக்கும் பிரான்ஸ் தீவிரமாக பயிற்சியெடுத்து வருகிறது.
எம்பாப்பே பாதுகாப்பு மாஸ்க்
ஆனால், பிரான்ஸ் அணித்தலைவர் கைலியன் எம்பாப்பே தாம் அணிந்திருக்கும் பாதுகாப்பு மாஸ்க் தொடர்பில் வருத்தத்தில் உள்ளார். ஆஸ்திரியா அணியுடனான ஆட்டத்தில் மூக்கில் காயம் பட்ட கைலியன் எம்பாப்பே, தீவிர சிகிச்சைக்கு பின்னர், தற்போது பாதுகாப்பு மாஸ்க் அணிந்து விளையாடி வருகிறார்.
திங்களன்று பெல்ஜியம் அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது. நெதர்லாந்து அணியுடனான ஆட்டத்தில் கோல் எதுவும் பதிவு செய்யாத எம்பாப்பே, போலந்துடன் ஒரு கோல் பதிவு செய்து ஆட்டத்தை சமனில் முடித்தார்.
போலந்துடனான ஆட்டத்தில் தான் எம்பாப்பே பாதுகாப்பு மாஸ்க் ஒன்றை அணிந்து களமிறங்கினார். ஆனால் அந்த மாஸ்க் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன்
மாஸ்க் அனிந்து விளையாடுவது என்பது உண்மையில் பயங்கரமானது என எம்பாப்பே குறிப்பிட்டுள்ளார். மாஸ்க் அணிந்து விளையாடுவது தமது பங்களிப்பை கட்டுப்படுத்துவதாக அவர் உணர்கிறார்.
மட்டுமின்றி, வியர்வை பார்வையை மறைக்கும் சூழலில், அதை அடிக்கடி நீக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது என்றார். இந்த நிலையில், பெல்ஜியம் அணியுடன் திங்களன்று பிரான்ஸ் அணி மோத இருக்கிறது.
2018 உலக கிண்ணம் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் கனவை தகர்த்து 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வென்றிருந்தது. அதற்கான பழிவாங்கும் ஆட்டமாக இது இருக்கலாம் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |