இனி சுவிட்சர்லாந்திலும் மாஸ்க் கட்டாயம் இல்லை: வெளியான முக்கிய தகவல்
இஸ்ரேல், ஆஸ்திரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் மாஸ்க் கட்டாயமல்ல என்பது அமுலுக்கு வந்துள்ள நிலையில், சுவிஸிலும் அது தொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் கட்டாயம் என்பதுடன், சமூக இடைவெளியும் பின்பற்றப் பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பானது கேட்டுக்கொண்டது.
அதன் அடிப்படையில் உலக நாடுகள் மாஸ்க் கட்டாயம் என்பதை அறிவித்ததுடன், பொதுவெளியில் மாஸ்க் பயன்படுத்தாதவர்களுக்கு பிழையும் விதித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஜூன் 1ம் திகதி முதல் கொரோனா தொடர்பிலான அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல மாகாணங்கள் மாஸ்க் கட்டாயம் அல்ல என்பதை அறிவித்துள்ளது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை என்பதையும் அமெரிக்க சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேப்போன்று ஜூன் 10ம் திகதி முதல் ஆஸ்திரியாவில் மாஸ்க் கட்டாயமல்ல என்பதை அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்திலும் அதுபோன்ற ஒரு நிலையை கொண்டுவர நிபுணர்கள் குழு முடிவு செய்துள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்தும், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம் அல்ல என்பதை அறிவிக்க உள்ளனர்.
சுவிஸில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னர் சாதாரண நிலைக்கு திரும்புவது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் சுவிட்சர்லாந்தில் ஜூன் மாதத்தில் இருந்தே மாஸ்க் கட்டாயம் அல்ல என்ற ஆணை பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.