பிரித்தானியாவில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: தந்தை, மகன் படுகாயம்
Masked intruders Attacks Home in Leicestershire: பிரித்தானியாவில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய தாக்குதலில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
முகமூடி அணிந்த நபர்களின் தாக்குதல்
லீசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய பயங்கரமான தாக்குதலில் அந்த வீட்டில் வசித்து வந்த தந்தை மற்றும் மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவமானது லிசெஸ்டர்ஷயர் தர்ன்பி(Thurnby) பகுதியில் உள்ள ஸ்டேஷன் ரோட்டில் உள்ள சொத்தில் அரங்கேறியுள்ளது.
தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும் வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 15 வயது சிறுவன் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்டனர்.

இந்த தாக்குதலில் சிறுவனின் தாயும், காயமடைந்த நபரின் மனைவியுமான 40 வயது பெண்ணுக்கு கை மற்றும் தோள்பட்டையில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலின் போது வீட்டில் இருந்த 3 குழந்தைகளும் எந்தவொரு காயமும் இன்றி தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்ற போதிலும், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.