கருப்பு முகமூடியுடன் போராட்டத்தில் குதித்த மர்ம கும்பல்: டோவர் துறைமுகத்தில் பரபரப்பு
பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
முகமூடி அணிந்தவர்களின் திடீர் போராட்டம்
டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகமூடி அணிந்த நபர்கள் திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், சரக்கு வண்டி ஓட்டுநர்கள் அச்சத்தில் உறைந்த தோடு கடும் அவதிக்கும் உள்ளாகினர்.

இவர்களின் இந்த போராட்டத்தால் துறைமுகத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளான A2 மற்றும் A20 ஆகிய பகுதிகள் தீவிர போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
P&O Ferries நிறுவனம் பயணிகள் துறைமுகத்திற்கு வருவதில் கட்டுப்பாடுகள் இருப்பதாக எச்சரித்து இருந்ததுடன், விடுமுறை சென்றவர்களும் லாரி ஓட்டுநர்களும் இதில் சிக்கி தவித்தனர்.
வாகன ஓட்டிகளின் எதிர்வினை
இந்த திடீர் ஆர்ப்பாட்டம் உள்ளூர் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
📢#PODOVER UPDATE:
— P&O Ferries Travel Updates (@POferriesupdate) September 5, 2026
Access to the Port of Dover has been partially restored and traffic is currently able to access the port via the M2/A2.
access remains restricted from the M20/A20 ⛔️.
Our services are operating with some delay, but we will get you onto the next available…
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒருவர் தெரிவித்த கருத்தில், கருப்பு நிற உடையில் வந்தவர்கள் காரை சூழ்ந்து கொண்டதால், என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று பயந்து விட்டதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கென்ட் காவல்துறையினர் இடத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டனர்.
மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தை நிலைமையை கட்டுப்படுத்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |