பிரம்மாண்ட போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஜேர்மனி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதிலிருந்தே தனது பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று என்பது பலரும் அறிந்ததே.
இந்நிலையில், பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றில் இறங்கியுள்ளது ஜேர்மனி.
பிரம்மாண்ட போர்ப்பயிற்சி
ரஷ்யா உக்ரைன் மோதல், ஈரான் அமெரிக்கா மோதல் என உலகம் எப்போது மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில், போர் வெடித்தால் ஒரு நேட்டோ உறுப்பினர் நாடு என்னும் முறையில், நடைமுறையில் என்ன செய்வது என்பதற்கான பயிற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது ஜேர்மனி.

The Quadriga 2026 என்னும் பெயரில் துவக்கப்பட்டுள்ள அந்த போர்ப்பயிற்சியில், லிதுவேனியாவிலிருந்து காயம்பட்ட ஏராளமான நேட்டோ வீரர்களை ஜேர்மனிக்கு எப்படி கொண்டுவருவது என்பது குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள் ஜேர்மன் வீரர்கள்.
போர் வெடிக்குமானால், நாளொன்றிற்கு 1,000 போர் வீரர்கள் வரை காயம்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஆகவே, போர் உண்மையாகவே வெடிக்கும்பட்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வதற்காகவே இந்த போர்ப்பயிற்சி துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
