மீண்டும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கனடா..! பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு
கனடாவின் உறைவிடப் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது பூமிக்கடியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், Saskatchewan மாகாணத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக The First Nations என்ற கனடா பழங்குகுடி குழு அறிவித்துள்ளது.
Saskatchewan மாகாணத்தல் உள்ள மூடப்பட்ட Marieval Indian Residential பள்ளியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிப்புகளின் விவரங்களை வெளிப்படுத்த வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் The First Nations தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.