கனேடிய பாடசாலை ஒன்றில் கொடூர சம்பவம்... பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பாடசாலை ஒன்றில் 10 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வகைகளை ஏற்படுத்தியுள்ளது.
10 சடலங்கள்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியிலேயே இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவயிடத்த்கிற்கு விரைந்த பொலிசார், தாக்குதல் நடத்தியவர் உட்பட 10 சடலங்களை மீட்டுள்ளனர்.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாடசாலைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி மதியம் 1.20 மணிக்கு டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், துரிதமாக செயல்பட்டுள்ளனர். முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், துப்பாக்கி குண்டுக்கு இலக்கான பலரது சடலங்களைப் பொலிசார் மீட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் ஒரு நபரும், தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்குள் மேலும் ஆறு பேர் இறந்து கிடந்தனர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது இறந்தார்.
மேலும் இருவர் பலத்த காயங்களுடன் பாடசாலையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மட்டுமின்றி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒரு வீட்டிற்குள் மேலும் இரண்டு சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இதனிடையே, வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிய, கூடுதல் வீடுகள் மற்றும் சுற்றுவட்டாரங்களை அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 மாணவர்கள்
இந்த நிலையில், அப்பகுதி குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு வலியுறுத்தி விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை மாலை 5:45 மணிக்குப் பிறகு நீக்கப்பட்டது, மேலும் வேறு எந்த சந்தேக நபர்களும் இருப்பதாகவோ அல்லது பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவோ தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
Tumbler Ridge பகுதியில் மொத்தம் 2400 பேர்கள் வசித்து வருகின்றனர். மாகாண அரசாங்க வலைத்தளத்தில், டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரையான 175 மாணவர்கள் பயின்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 10 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |