கனடாவில் மசாஜ் சென்டர் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த நிலை! கைதான மசாஜ் தெரபிஸ்ட்
கனடாவில் மசாஜ் செய்ய சிகிச்சை மையம் வந்த பெண்ணிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிராம்டனில் தான் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. பொலிசார் கூறுகையில், 40 வயதான பெண்ணொருவர் அங்குள்ள ஒரு கிளினிக்குக்கு மசாஜ் செய்து கொள்ள வந்தார்.
அப்போது 42 வயதான மசாஜ் தெரபிஸ்ட் ஒருவர் அப்பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்டார். இது தொடர்பாக தரப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
CBC
அவர் அக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிராம்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைது செய்யப்பட்ட நபரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
ஆகவே அது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் சிறப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.