சுவிஸ் நகரமொன்றில் பாரிய வெடிவிபத்து: 2 பேர் பலி, பலர் காயம்
சுவிஸ் நரமொன்றில் நேற்றிரவு நிகழ்ந்த பாரிய வெடிவிபத்தொன்றில் சிக்கி இரண்டு பேர் பலியானார்கள்.
சுவிஸ் நகரமொன்றில் பாரிய வெடிவிபத்து
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Nussbaumen நகரில், நேற்று மாலை 7.00 மணியளவில், கட்டிடமொன்றின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெடிவிபத்தொன்று ஏற்பட்டது.
அந்த விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள், 11 பேர் காயமடைந்துள்ளார்கள். வேறு யாரேனும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தேடும் பணி தொடர்கிறது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தின் பல குடியிருப்புகளுக்கும் தீ பரவத் துவங்க, அங்கு வசித்துவந்தவர்களை அவசரமாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
எதனால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், கட்டிடத்தின் மாடியில் தஞ்சம் அடைந்தவர்களை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் மீட்டனர்.
வெடிவிபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டிடம் வலுவிழந்திருக்கலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளதால், அதில் வசித்தவர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பொலிசார் இந்த வெடிவிபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |