லண்டனில் இரயில் நிலையத்திற்கு அருகில் பயங்கர தீ விபத்து! அலறி அடித்து ஓடிய மக்கள்: தீயை அணைக்க போராடி வரும் காட்சி
லண்டனில் இருக்கும் பிரபல இரயில் நிலையத்தின் அடியில் இருக்கும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், தீயணை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
தெற்கு லண்டனில் இருக்கும் Elephant and Castle இரயில் நிலையத்தில் அடியில் இருக்கும் கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக அருகில் இருந்த சில கார்கள் தீ பிடித்து விபத்தில் கருகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து காரணமாக தற்போது வரை யாராவது காயமடைந்திருக்கிறார்களா? என்பது தெரியவில்லை, தீ விபத்து குறித்து சரியாக பிற்பகல் 1.43 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள், 70 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
Elephant and Castle #tfl #explosion pic.twitter.com/PdSttKR80b
— Megan Jearum (@MeganJearum) June 28, 2021
இதனால் இப்பகுதியை மக்கள் தற்போதைக்கு தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீ விபத்தால், அதிக புகைகள் வெளியேறுவதால், அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைக்கு இரயில்நிலையம் இந்த தீ விபத்து காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், திடீரென்று ஒரு பயங்கர வெடி சத்தம் போன்று கேட்டது, அதன் பின் ஜன்னலை நாங்கள் திறந்து பார்த்த போது, புகை மற்றும் தீப்பிடித்து கொண்டிருந்தது, அங்கிருந்த சிலர் அலறி அடித்து ஓடுவதை பார்க்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.