சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த பாரிய ஹெலிகொப்டர் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரித்தானியர்கள்
சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த பாரிய ஹெலிகொப்டர் விபத்தொன்றில் மூன்று பிரித்தானியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
ஆனால், ஹெலிகொப்டரை இயக்கிய பைலட், வழிகாட்டி ஒருவர், அவர்களுடன் பயணித்த மற்றொருவர் என மூன்று பேர் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டார்கள்.
பாரிய ஹெலிகொப்டர் விபத்து
நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமையன்று, காலையில், சுவிட்சர்லாந்திலுள்ள Valais பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைக்கு ஹெலிகொப்டர் ஒன்றில் ஒரு குழுவினர் சென்றுள்ளார்கள்.
Image: WALLIS POLICE HANDOUT/EPA-EFE/REX/Shutterstock
அப்போது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாகவும், ஹெலிகொப்டர் பனிப்பாறைச் சரிவில் சிக்கியதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியர்களான Edward Courage என்பவரும், அவரது சகோதரர்களான Teddy மற்றும் Guy Hitchens என்பவர்களும் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த நிலையிலும், எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பியுள்ளார்கள்.
Image: VALAIS CANTONAL POLICE/HANDOUT/EPA-EFE/REX/Shutterstock
அவசர உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஹெலிகொப்டர்கள் மூலம் விரைந்த நிலையில், உயிர் தப்பியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், ஹெலிகொப்டரை இயக்கிய Jerome Lovey என்பவரும், James Goff என்பவரும் Adam George என்னும் வழிகாட்டியும் உயிரற்ற நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக Valais மாகாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |