ஈபிள் கோபுரத்தை தாக்கிய சக்தி வாய்ந்த மின்னல்: தப்பித்தது எப்படி? வைரல் வீடியோ
பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரம் மீது சக்தி வாய்ந்த மின்னல் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸில் ஆலங்கட்டி மழை
கடந்த சில நாட்களாக பிரான்ஸ், ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்ப அலை வீசி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புயல் காற்று மற்றும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
இந்த தீவிரமான மழைப்பொழிவின் நடுவே தோன்றிய பிரம்மாண்டமான மின்னல் ஒன்று உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை தாக்கியது.
ఈఫిల్ టవర్పై పిడుగు కాంతి అద్భుతం.
— Madhuri Daksha (@MadhuriDaksha) June 28, 2026
ఆకాశంలో అద్భుతమైన కాంతులతో పారిస్ మెరిసిపోయింది.#Paris #Wonder #EffileTower #viral pic.twitter.com/i9EFKgmjm0
சுமார் 1063 அடி உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சியை பிரம்மாண்ட மின்னல் தாக்கிய இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஈபிள் கோபுரம் தப்பித்தது எப்படி?
கிட்டத்தட்ட 1 லட்சம் வோல்ட் மின்சார திறன் கொண்ட மின்னல் ஈபிள் கோபுரத்தை தாக்கிய போதிலும், அதில் சிறிது பாதிப்பு கூட ஏற்படவில்லை.
காரணம், ஈபிள் கோபுரத்தின் உச்சியில் அதிநவீன மின்னல் கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளது. இயற்பியலின் ஃபாரடே கூண்டு தத்துவத்தின் படி, மின்னலின் போது உருவாகும் அதிகமான மின்சாரத்தை வெளிப்புற கட்டமைப்புகள் மூலம் கடத்தி பாதுகாப்பாக பூமிக்குள் கடத்தி விடுகிறது.

ஈபிள் கோபுரத்தின் பிரம்மாண்டமான உயரம் காரணமாக ஆண்டுக்கு 5 முதல் 10 முறை மின்னல் தாக்குவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று ஈபிள் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |