MasterChef Australia போட்டியில் இலங்கை பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம் - குவியும் வாழ்த்துக்கள்
MasterChef Australia போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை பெண் சாவிந்திரி பெரேராவுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம்
2024 ஆம் ஆண்டிற்கான MasterChef Australia போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டுள்ளார்.
இவர் தனது 18 வயதில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த 30 வயதான பெண் ஆவார்.
முதலில் போட்டியில் இருந்து வெளியேறினாலும், மீண்டும் போட்டித் தொடரில் இணைவதற்கான வாய்ப்பைப் பெற்ற எட்டு போட்டியாளர்களில் இப்பெண்ணும் ஒருவர் ஆவார்.
இவர் தயாரித்த இலங்கை உணவை ருசித்த நடுவர்கள் பாராட்டியுள்ளனர்.
போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் வரவிருக்கும் சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார்.
குவியும் வாழ்த்துக்கள்
இவர் பங்கேற்றி குறிப்பட்ட சுற்றில் இலங்கையின் மதிய உணவை வழங்கியுள்ளார். அதில் பன்றி இறைச்சி கறி, மிளகாய் இறால், உருளைக்கிழங்கு பால் குழம்பு, வெங்காய இலை சம்பல், கத்திரிக்காய், நெய் சோறு உள்ளிட்ட பல வகையான உணவுகளை வழங்கியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து, MasterChef போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவருடைய இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |