பாகிஸ்தானை விட இந்தியாவில் வெற்றியாளர்கள் அதிகம்: எங்களிடம் அப்படி இல்லை..முன்னாள் ஜாம்பவான்
இந்திய அணியில் தங்கள் அணியைவிட போட்டி வெற்றியாளர்கள் அதிகம் என முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஷாஹித் அஃப்ரிடி (Shahid Afridi) இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நாம் போட்டி வெற்றியாளர்கள் (Match Winners) குறித்து பேசினால், பாகிஸ்தானை விட இந்தியாவில் போட்டி வெற்றியாளர்கள் அதிகம் என்று நான் கூறுவேன்.
போட்டி வெற்றியாளர் என்பது தனித்து நின்று ஆட்டத்தை எப்படி வெல்வது என்பது தெரிந்தவர். தற்போது, பாகிஸ்தானில் அத்தகைய வீரர்கள் இல்லை.
இந்தியாவின் பலம் மிடில் மற்றும் பின்வரிசையில் உள்ளது, அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |